Batticaloa

Batticaloa

Kavalan

Kavalan

sura movie

Batti Town

Batti Town

tamilan

ennatha solla

Visiters

Video Song

Donnerstag, 24. Juni 2010

பூமியை சூரியன் விழுங்கி விடுமா?


இன்னும் 760 கோடி ஆண்டுகளில் பூமி இருக்காது. அதை சூரியன் விழுங்கி விடும் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதுகுறித்து இங்கிலாந்தின் சஸ்ஸக்ஸ் பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் ஸ்மித் தலைமையிலான நிபுணர் குழு ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

சூரியன் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டு வருகிறது. இப்படியே போனால் இன்னும் 760 கோடி ஆண்டுகளில் அது பூமியை விழுங்கி விடும். சூரியனின் வெப்பம் காரணமாக பூமியில் எதுவும் இருக்காது எல்லாம் சாம்பலாகி விடும். சூரியனின் வெப்பத்தால் கடல்கள் அனைத்தும் ஆவியாகி முற்றிலுமாக வற்றிப் போய் விடும் என்கிரார் ராபர்ட் ஸ்மித்.

இதைத் தவிர்க்க முடியாதா பூமியைக் காப்பாற்ற முடியாதா என்ற கேள்விக்கு ஸ்மித் பதிலளிக்கையில் இதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது.வான்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு பெரிய விண்கல்லை பூமியின் புவி வட்டப் பாதைக்கு இழுத்து அதனுடன் பூமியை மோத விட வேண்டும். அப்படி மோதினால் நமது புவி வட்டப் பாதை மாறி வேறு பாதைக்கு நாம் வீசப்படுவோம். அப்படிச் செய்தால் சூரியனின் கோரப் பிடியிலிருந்து பூமி தப்பலாம்.

இது சாத்தியமா பேத்தலாக இருக்கிறதே என்று நினைக்கக் கூடாது. இன்னும் சில நூற்றாண்டுகளில் இப்படி ஒரு மோதலை ஏற்படுத்தக் கூடிய தொழில்நுட்பத்தை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே பூமி அழியலாம் என்று பயப்படுவதை விட தப்பி விடும் என்ற நம்பிக்கையுடன் நாம் இருக்கலாம் என்கிறார் ஸ்மித்.

அதற்குள் புதிதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள புவி போன்ற மற்றைய கிரகங்களுக்கு மனிதன் புலம் பெயர்ந்துவிடுவான். 760 கோடி ஆண்டுகள் எதற்கு? இன்றுள்ள மனிதர் எவரும் மேலும் 150 ஆண்டுகளுக்கு பின்னர் உயிருடன் இருக்கமாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sonntag, 30. Mai 2010

புதிய ஸ்பைஸ் போன்கள்



மியூசிக் போன்கள் வரிசையில் ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம் இரண்டு போன்களை வெளியிடுகிறது. இந்த மாதம் வெளிவர இருக்கும் இவை எம் 6464 மற்றும் எம்6262 என அழைக்கப்படுகின்றன.
இந்த இரண்டு போன்களிலும் யமஹா ஆம்ப்ளிபையர் மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் இருப்பது இவற்றின் சிறப்பு. இதில் உள்ள எம்பி3 பிளேயருக்கு ஒரே கீயில் இயக்கம் தரப்பட்டுள்ளது. ஸ்டீரியோ புளுடூத் வசதி உள்ளது. இதனுடைய மெமரியினை 8 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.

டூயல் சிம் எம் 6464 போனில் 2 எம்பி கேமரா இணைக்கப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ இருப்பதுடன், எப்.எம். ட்ரான்ஸ்மீட்டரும் தரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அலைவரிசையில் இதிலிருந்து பாடல்களை ஒலிபரப்பலாம்.

போனை அசைத்தால் பாடல்கள், வால் பேப்பர்கள், கேம்ஸ் ஆகியவை மாறுகின்றன. போனிலேயே ibibo, Reuters, Opera Mini, Mobile Tracker, mgurujee ஆகியவை பதிந்து தரப்படுகின்றன. ஹிந்தி ஆங்கிலம் கலந்து இதில் டெக்ஸ்ட் டைப் செய்திட முடிகிறது.

எம் 6262 போனில் வீடியோ கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போனிலும் ibibo, Opera Mini, SMS Scheduler, Privacy Lock ஆகியவை தரப்படுகின்றன. தேவையற்ற எண்களிலிருந்து வரும் அழைப்புகளையும் இதில் தடுக்கும் வசதி உள்ளது.

நீர்மேல் நடக்கும் வீடியோ



யூடியூப்பில் வெளியாகியிருக்கும் இளைஞர்களின் சாகச வீடியோ காட்சி ஒன்று இணையவாசிகள் மத்தியில் நம்ப முடியாத உணர்வை ஏற்படுத்தி, பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.
வாட்டர் வாக்கிங் அதாவது நீர்மேல் நடப்பது என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சி யூடியூப்பில் லேட்டஸ்ட் ஹிட்டாக முடிசூட்டப்பட்டுள்ளது. வீடியோ பகிர்வு தளமான யூடியூப் இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. வீடியோ காட்சிகளை பதிவேற்றவும், மற்றவர்கள் பதிவேற்றிய வீடியோ காட்சிகளை பார்க்கவும் யூடியூப் உதவுகிறது.

கூகுல் நிறுவனத்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட யூடியூப் வீடியோ பதிவு தளங்களில் பிரபலமானதாகவும், முன்னணி தளமாகவும் விளங்குகிறது. யூடியூப்பில் இடம் பெறும் வீடியோ கோப்புகளில் அலுப்பூட்டும் காட்சிகள் அதிகம் என்றாலும் அவற்றுக்கு மத்தியில் புன்னகைக்க வைக்கக்கூடியதும், பிரம்மிப்பில் ஆழ்த்தக்கூடியதுமான காட்சிகள் அவ்வப்போது இணையவாசிகளை கவர்ந்து உலகம் முழுவதும் பிரபலமாகி விடுவது உண்டு.

அந்தவகையில் இப்போது யூடியூப்பில் இளைஞர்களின் சாகச வீடியோ காட்சி ஒன்று பிரபலமாகி இருக்கிறது. பார்ப்பவர்களை யெல்லாம் வியப்பில் ஆழ்த்தியுள்ள அந்த வீடியோ காட்சியானது இதுவரை பல்லாயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு, லட்சக்கணக்கானோரால் ரசிக்கப்பட்டுள்ளது.

3 இளைஞர்கள் தண்ணீர் மேல் வேகமாக நடந்து செல்லும் காட்சியை அந்த வீடியோ சித்தரிக்கிறது. இதுவரை யாரும் பார்த்தறியாத செயற்கறிய செயல் எனும் வர்ணனையோடு அல்ப் கார்ட்னர் மற்றும் அவரது நண்பர்கள் இந்த வீடியோ காட்சியை பதிவேற்றியுள்ளனர். போர்ச்சுகல் நாட்டில் உள்ள ஏரி ஒன்றில் தண்ணீர் மீது இந்த 3 இளைஞர்களும் மின்னல் வேகத்தில் நடந்து செல்லும் காட்சி உண்மையிலேயே வியப்பில் ஆழ்த்தக்கூடியதாக இருக்கிறது.

முதல் பார்வைக்கு பிரம்மிப்பை உண்டாக்கும் இந்த காட்சி உண்மையிலேயே நிகழ்த்தப்பட்டதா அல்லது ஏதாவது ஏமாற்று வேலையா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் காட்னர் மற்றும் அவரது நண்பர்கள் இந்த காட்சிக்கு பின்னே எந்த ஏமாற்று வேலையும் கிடையாது. இது முழுக்க முழுக்க சாகசம் என்று உற்சாகமாக கூறுகின்றனர்.

இப்படி தண்ணீர் மேல் நடக்கும் நம்ப முடியாத செயலை ஒரு புதிய விளையாட்டு என்று வர்ணிக்கும் கார்ட்னர் இந்த விளை யாட்டிற்கு நீர்மலையேறுதல் என்று புதியதோர் பெயரையும் சூட்டியுள்ளார். நீர்மேல் நடப்பது சாத்தியமில்லாதது போல் தோன்றினாலும் உண்மையில் தண்ணீர் புகாத ஷýவை அணிந்து கொண்டால் தண்ணீர் மேல் நடக்கலாம் என்றார் அவர்.

இத்தகைய ஷýவை அணிந்து கொண்டு தண்ணீர் மேல் கால் வைத்ததும் நிற்காமல் மின்னல் வேகத்தில் ஓடுவது போல நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறுகிறார். தையல் இயந்திரத்தின் செயல்பாட்டை போல கால்கள் படுவேகமாக நடக்கும் போது இது எளிதில் சாத்தியம் என்கிறார் அவர். இப்படி போர்ச்சுகல் ஏரியில் அவர்கள் 10 அடிகளை வைத்து நடந்து காட்டியிருக்கின்றனர். மெய்யோ பொய்யோ தெரியாது. ஆனால் இந்த சாகச விளையாட்டு இன்டெர்நெட்டில் ஆச்சர்ய அலைகளை பரப்பி வருகிறது.

நிலவுக்கு ரோபோ அனுப்பும் மாணவர்கள்


13 1/2 கோடி பரிசு அறிவிப்பு மனிதன் நிலவில் கால்பதித்து 40 ஆண்டுகள் ஆகின்றன. அதன்பிறகு எத்தனையோ விண்வெளி ஓடங்கள் நிலவுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
தற்போது ஸ்பெயின் நாட்டு மாணவர்கள் குழு நிலவுக்கு ஒரு ரோபோவை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கான ரோபோ தயாராகிவிட்டது. காஸ்டல்டிபெல்ஸ் ஸ்கூல் ஆப் டெக்னாலஜி பள்ளி மாணவர்கள் குழு இந்த ரோபோவை வடிவமைத்துள்ளது.

`பிக்கோ ரோவர்’ என்பது இந்த ரோபோவின் பெயராகும். இந்த ரோபோ 250 கிராம் எடை கொண்டது. பந்து போன்ற வடிவம் உடையது. நவீன கேமரா, கம்ப்யூட்டர், சிறிய மோட்டார், பேட்டரி ஆகியவை இருக்கும்.

இந்த ரோபோவானது கோளவடிவில் இருந்தாலும் பூமிபோல 33 டிகிரி சாய்வாக இருக்கும். இதன் மேல் அரைக்கோளத்தில் இருக்கும் கேமரா சுழன்று படம் எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அடிப்பாகமும், சக்கரங்களும் ரோபோ எடையை சமநிலைப்படுத்தும் படியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நிலவில் உள்ள பாறைகள், மணல் ஆகியவற்றை இந்த ரோபோ ஆய்வு செய்து படங்களை அனுப்பி வைக்கும். இந்த ரோபோ எப்போது நிலவுக்கு கிளம்புகிறது என்று அறிவிக்கப்படவில்லை. ஆனால் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதற்கு பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? 131/2 கோடி ருபாய்.

ரோபோ நிலவுக்குச் சென்று வெற்றிகரமாக செயல்பட்டு அது அனுப்பும் புகைப்படம் மற்றும் தகவல்கள் பூமிக்கு கிடைத்துவிட்டால் பரிசுத்தொகை மாணவர் குழுவுக்கு வழங்கப்படும். `கூகுள் லூனார் எக்ஸ்பிரைஸ்’ என்று இந்த பரிசுத் திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இது தவிர அரசுசாரா அமைப்பும் சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
Samstag, 15. Mai 2010

கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?

ஒரு கிலோ உடம்பு எடைக்கு ஒரு நாளுக்கு 2 கிராம் புரதத்திற்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல. அதிகளவு புரதம் பி6 வைட்டமின் பற்றாக்குறையை உண்டாக்கும்.
மாவு உணவுப் பொருட்களை பொறுத்தவரை ஆரோக்கியமான ஆண்களுக்கு சமைத்த 315 கிராம், பெண்களுக்கு 250 கிராம், நீரழிவு வியாதி உள்ளோருக்கு 185 கிராம் அளவு தினமும் எடுப்பது நல்லது.

ஆரோக்கிய மனிதர்களுக்கு தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் தேவை.

மிகக்குறைந்த அளவில் கொழுப்பை உண்பதும் அல்லது முழுமையாக அதை தவிர்ப்பதும் இருதய நோய்க்கு நாம் வரவேற்பு கொடுப்பது போல ஆகிவிடும். மொத்த உணவில் 20 முதல் 30 சதவீதம் கலோரிகள் வரை கொழுப்பின் அளவு இருக்கலாம்.

கொழுப்பை முழுவதுமாக தவிர்த்தால் மலச்சிக்கல் உண்டாகும்
இந்திய மாணவர்கள் தயாரித்த செயற்கை கோள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான `இஸ்ரோ’ தனது விண் வெளி ஆய்வுப் பணிகளில் கல்லூரி மாணவர்களையும் இணைத்துள்ளது. இதன்படி பெங்களூர் மற்றம் ஐதராபாத் ஆகிய நகரங்களைச் சேர்ந்த 7 பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து `ஸ்டுட் சாட்’ என்ற பெயரில் ஒரு சிறிய செயற்கைகோளை உருவாக்கி உள்ளனர்.
`ஸ்டுடன்ட் சாட்டிலைட்’ என்பதன் சுருக்கமே `ஸ்டுட் சாட்’ என்பதாகும். (Student Satel lite&STUD SAT)

சுமார் 55 லட்சம் ருபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் 10x10x13.5 சென்டி மீட்டர் அளவு கொண்டது. இதன் எடை சுமார் 850 கிராம். இந்த செயற்கைகோளில் தகவல் தொடர்பு கருவி, பேட்டரி, கண்ட்ரோல் கருவிகள் மற்றும் சக்திவாய்ந்த கேமிரா ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

விரைவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மற்ற செயற்கை கோள்களுடன் மாணவர்கள் செயற்கைக் கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் செயற்கை கோள் பூமியில் இருந்து சுமார் 680 கிலோ மீட்டர் உயரத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்படும். அங்கு சுற்றி வந்தபடியே இந்த செயற்கை கோள் பூமியை படம் பிடித்து தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். இந்தபடங்களை மாணவர்கள் தங்களது கல்வி மற்றும் ஆராய்ச்சிப்பணிகளுக்கு பயன்படுத்துவார்கள்.

செயற்கை கோளை தயாரித்த மாணவர்கள் குழு இதை சிலவாரங்களுக்கு முன்பு இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதை ராக்கெட்டில் பொருத்தும் பணியை செய்து வருகிறார்கள்.
Sonntag, 9. Mai 2010

Sura super hit film


இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் யாழ் குப்பத்து மீனவர்கள். மழையில் வெள்ளத்திலும் கோடையில் அனலிலும் ஓலைக் குடிசையில் வாழும் அவர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பது அந்த குப்பத்து இளைஞன் சுறாவின் ஆசை. குப்பத்து மக்களுக்கு எல்லாமும் அவர்தான். அவர் விரல் நீட்டும் திசைநோக்கி நடப்பார்கள். வீட்டுப் பிரச்னையிலிருந்து ஊர் பிரச்னை வரை தீர்த்து வைப்பதும் சுறாதான். வீடுகட்டும் கனவில் சுறா மிதந்து கொண்டிருக்கும்போது வில்லன் ரூபத்தில் வருகிறது பிரச்னை. புறம்போக்கு நிலமான யாழ் குப்பத்தை வளைத்துப்போட்டு அதில் வேடிக்கை விளையாட்டு பூங்கா அமைக்க ஆசைப்படுகிறார் வில்லன் தேவ் கில். அதிகாரம், ஆள், பணம் என்ற முப்பெரும் பலம் வாய்ந்த மந்திரி, அதற்கு தடையாக இருக்கும் சுறாவை அழிக்க ஆள் அனுப்புகிறார். அது முடியாமல் போகவே, குப்பத்துக்கு தீவைத்து சாம்பலாக்குகிறார். அந்த நெருப்பில் சுறாவையும் தள்ளி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். நெருப்பிலிருந்து உயிர்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போன்று சுறா, அந்த நெருப்பிலிருந்து புதிதாக புறப்பட்டு வருகிறார். அந்த பக்கம் பண முதலையும், இந்த பக்கம் சூறாவளி சுறாவும் நிற்கிறார்கள். அப்புறம் ஆரம்பிக்கும் ஆக்ஷன் சுனாமி, அதிரடி சரவெடி. புயலால் நடுக்கடலில் சிக்கிய மீனவர்களை காப்பாற்றிய சுறா, கடலில் மூழ்கிவிட, மக்கள் கரையில் பரிதவித்து நிற்கும்போது நீந்தியே கரையேறும் சுறா விஜய்யின் அறிமுகமே அமர்க்களமாக துவங்குகிறது. அம்மாவிடம் அன்பு, மீனவ மக்களிடம் பணிவு, எதிரிகளிடம் கடுமை, தமன்னாவிடம் காதல், வடிவேலுவிடம் காமெடி என வெரைட்டி மீல்ஸ் பரிமாறுகிறார் விஜய். அம்மாவுக்கு தானே மீன் குழம்பு வைத்து சாப்பாடு போடுவதில் அன்பு தெரிகிறது. ரேஷன் கார்டை அடகுவைத்து குடிக்கும் குடிமகனை திருத்தி அவன் மனைவியிடம் ஒப்படைக்கும்போது கனிவு தெரிகிறது. தமன்னா கடத்தப்பட்ட மறுநிமிடமே வில்லன் வீட்டு வாசலில் நிற்கும்போது காதல் தெரிகிறது. ‘நீ நினைக்கிற மாதிரி நான் புறா இல்லடா சுறா’ என்று வில்லனிடம் அதிரும்போது கடுமை தெரிகிறது. காதலி வீட்டு மாடி ஏற ஏணி கொடுத்து உதவும் வடிவேலுவிடம், ‘அண்ணா உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்கன்ணா’ என்று திரும்ப திரும்ப கூறும்போது காமெடி தெரிகிறது. இப்படி ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கான அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்தியிருப்பதில் விஜய்யின் முழு திறமையும் தெரிகிறது. இதுவரை தனி நபர்களுக்காக போராடி வந்த விஜய், இந்த படத்தில் மக்களுக்கான போராட்டத்தை நடத்துகிறார். அதனால் சமூககேடுகளை ஆங்காங்கே புட்டு புட்டு வைக்கிறார். ரேஷன் கார்டை அடகு வாங்கும் கந்துவட்டிக்காரன், ஆசை நாயகி வீட்டில் தங்கும் போலீஸ் அதிகாரி, கொடுத்த வாக்கை காப்பாற்றாத அரசியல்வாதி, பொய்யை நம்பி வாதாடும் வழக்கறிஞர், அரசியல்வாதிக்கு அடிபணிந்து போகும் அதிகாரி என போகிற போக்கில் பொறிதட்ட புரட்டிவிட்டுப்போகிறார். அனல் பறக்கும் வசனங்களும், பரபரக்கும் பஞ்ச் டயலாக்குகளும் கைதட்டலை அள்ளிச் செல்கிறது. துவக்கப்பாடலில் இருந்து வெளிநாட்டு டூயட் வரைக்கும் விஜய்யின் நடன அசைவுகளை, நடனம் பயில்பவர்களுக்கு பாடமாக வைக்கலாம். குறிப்பாக ‘தஞ்சாவூரு ஜில்லாக்காரியில்...’ அவரின் புதுமையான நடன அசைவுகளின்போது இமைகள் இமைக்க மறுக்கிறது. ‘நான் செத்த பிறகு, என் உடம்பை மீடியாலாம் போட்டோ எடுக்கும். அப்போ என் முகம் டல்லாயிடக் கூடாதில்ல’ என்று தற்கொலைக்கு முன், மேக்&அப் போட்டதின் காரணத்தை சொல்வதிலிருந்து ஆரம்பமாகிறது தமன்னாவின் கலாட்டா. தூக்குப்போட்டு தற்கொலை செய்யும்போது செல்ல நாய்க்கும் தூக்கு கயிறு ரெடி பண்ணி வைப்பது என்று தமன்னா இதுவரை காட்டாத காமெடி முகம் கலர்புல் கலகலப்பு. காஷ்மீர் ஆப்பிள் மாதிரியான தமன்னா கடல் சுறாவை காதலித்து கனவுகளில் ஆடும் டூயட்டுகள் கோடைக்காலத்துக்கேற்ற குளிர்ச்சி ஏரியாக்கள். ‘சிறகடிக்கும் நிலவு...’ பாடலில் தமன்னாவின் அசைவுகள் கிக் டைப். ஜாலி டூயட்டும், டப்பாங்குத்துமாக படத்துக்கு இசையலங்காரம் செய்திருக்கிறார் மணிசர்மா. தனது குடோனில் அந்நியன் ஒருவன் நுழைந்திருப்பதை வாசனையை வைத்தே உணரும் அதிரடி வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார் தேவ் கில். ஒவ்வொரு முறையும் வீரத்துடன் திட்டம் போடுவதும், அவை தோற்கும்போது ஆத்திரத்தில் அலறுவதிலுமாக வில்லன் வேலையை கச்சிதமாக செய்கிறார். ‘பருத்தி வீரன்’ சுஜாதாவுக்கு ஹீரோவின் அம்மாவாக புரமோஷன் கிடைத்திருக்கிறது. அந்த கால சுஜாதா இல்லாத குறையை போக்கியிருக்கிறார். படத்தின் இன்னொரு ஹீரோ என்று வடிவேலுவைச் சொல்லலாம். அந்த அளவுக்கு காமெடி காக்டெய்ல் விருந்து வைக்கிறார். காலையில் நடக்கும் படகுபோட்டிக்கு மாலையில் போய் சேர்வதில் தொடங்குகிறது அவரது அலப்பறை. கடலில் குதித்து தண்ணீர் குடித்து மயங்கிக் கிடக்கும் தமன்னா வயிற்றை அமுக்கி, தண்ணீரை வெளியேற்ற விஜய் முயற்சிக்கிறார். ‘இந்த புனித பணியில என் பங்கும் இருக்கணும்னு விரும்புறேன்’ என்று வடிவேலும் உதவப்போக, திடீரென விழிக்கும் தமன்னா, ‘இது என்ன தண்ணீர் தொட்டியா?‘ என்று வயிற்றை காட்ட சிரிப்பில் அலறுகிறது தியேட்டர். இப்படி காட்சிக்கு காட்சி வடிவேலுவின் ‘வெடிவேலு’ அவதாரம் அதிகம். மீனவர்களுக்கு வீடுகட்ட, வில்லனின் கடத்தல் கப்பலையே மும்பைக்கு லவட்டிக் கொண்டுபோய் 100 கோடி ரூபாய் சம்பாதிப்பது, குடியிருந்த இடத்துக்கு கலெக்டர் ஆதாரம் கேட்கும்போது யாரும் எதிர்பாராத வகையில் அதை கச்சிதமாக எடுத்துக் கொடுப்பது, புதிய வீடுகளை தகர்க்க குண்டு வைத்து விட்டு விஜய்யை கட்டி வைத்து அடித்து கொக்கரிக்கும்போது வில்லனுக்கு விஜய் கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட் என்று இயக்குனர் எஸ்.பி.ராஜகுமாரின் விறுவிறு திரைக்கதையும், இயக்கமும் படத்தை டாப் கீயரில் கொண்டு செல்கிறது. மணிசர்மாவின் பின்னணி இசையும், ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் படத்தின் வேகத்துக்கு சக்கரமாக உதவியிருக்கிறது.

Kavalan

Kavalan

Tamil Songs


music

Meine Blog-Liste


SURA

SURA

Video Song

batti in ஆசிரியர்

batti in ஆசிரியர்

sura

Sports - Latest News