Freitag, 7. September 2012

செப்.12ஆம் திகதி வெளியாகிறது அப்பிளின் iPhone 5


கைப்பேசி பாவனையாளர்களின் பலத்த எதிர்பார்ப்புக்களின் மத்தியில் வித்தியாசமானதும், அதிநவீன தொழில்நுட்பங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ள அப்பிளின் iPhone 5 இனை அறிமுகப்படுத்தும் திகதியினை அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 12ம் திகதி வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக லோகோ ஒன்றினையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

12 என்ற இலக்கத்தை கொண்ட குறித்த லோகோவின் நிழலாக 5 என்ற எண் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் 12 என்பது வெளியிடப்படவுள்ள திகதியையும், 5 என்பது iPhone 5 என்பதினையும் குறித்து நிற்கின்றது.

நான்கு அங்குல தொடுதிரை போன்ற பல்வேறு வசதிகளுடன் கூடிய இக்கைப்பேசியினை வெளியிடும் நிகழ்வானது சன் பிரான்ஸிஸ்கோ நகரில் அமைந்துள்ள Yerba Buena உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.



Kavalan

Kavalan

Tamil Songs


music

Meine Blog-Liste


SURA

SURA

Video Song

batti in ஆசிரியர்

batti in ஆசிரியர்

sura

Sports - Latest News